அமைதி கேட்கிறோம்!
என் தமிழ் சகோதரர்கள் வாழ!
சுதந்திரம் கேட்கிறோம்!
அவர்கள் தலைநிமிர்ந்து நடக்க!
பேச வார்த்தைகள் எங்களிடமும் இல்லை!
கேட்க செவிகள் உங்களுக்கும் இல்லை!
தலைவர்கள் வந்தார்கள்; தலைவர்கள் சென்றார்கள்.
தெளியவில்லை சித்தம்! தெரித்ததோ ரத்தம்!
மீண்டும் இதோ ஒரு பாதை! ரத்தம் உறைந்த தேசத்தில் பூக்கள் உதிக்க!
சித்தம் தெளிந்து உலகில் சாந்தி தழைக்க
மீண்டும்
அமைதி கேட்கிறோம்!
என் தமிழ் சகோதரர்கள் வாழ!
உலகம் கண்டெடுத்த பேரழிவு ஆயுதங்கள் அனைத்தும்
சோதிக்க பட்டுவிட்ட நிலையில்!
மீண்டும்
அமைதி கேட்கிறோம்!
என் தமிழ் சகோதரர்கள் வாழ!
No comments:
Post a Comment